ஆலவயலில் இன்று நடக்கிறது: உழவரைத்தேடி ேளாண்மைத்துறை திட்டம் முகாம்

பொன்னமராவதி,மே 29: பொன்னமராவதி அருகே ஆலவயலில் இன்று உழவரைத்தேடி வேளாண்மை திட்ட விளக்க அறிமுக கூட்டம் நடக்கிறது. ‘உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைப்பதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், ஆலவயல் கிராமத்தில் சமுதாய கட்டிடத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ரஹ்மத் நிஷா பேகம் தலைமையில் இத்திட்டம் குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தோட்டக்கலை, வேளாண் விற்பனைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால், உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதோடு, வேளாண்மையினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் மூலம் திட்டங்களை எடுத்துக்கூறி கிராம விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இம்முகாமில், விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை துறைச் சார்ந்த அலுவலர்களிடம் நேரடியாக அளிக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post ஆலவயலில் இன்று நடக்கிறது: உழவரைத்தேடி ேளாண்மைத்துறை திட்டம் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: