நீடாமங்கலம், மே 6: நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மீன் அமில பயிற்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண் பணி அனுபவம் என்ற பயிற்சியின் கீழ் நீடாமங்கலத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.இப்பயிற்சியின் கீழ் கிராமங்களில் மக்களுக்கு பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக நீடாமங்கலம் அருகில் உள்ள ஆலங்குடியில் விவசாயி நந்தகுமார் என்பவரது வயலில் மீன் அமிலம் செயல் முறை விளக்கமும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும், பல பாரம்பரிய நெல் சாகுபடி குறித்தும், அதை சேமித்து வைக்கும் முறைகளையும் அவர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதன் மூலம் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
The post ஆலங்குடியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மீன் அமில பயிற்சி appeared first on Dinakaran.
