ஆறுமுகநேரி, ஏப்.27: ஆறுமுகநேரி காமராஜபுரம் பரி.இமானுவேல் ஆலயத்தின் 54வது பிரதிஷ்டை விழா கடந்த 23ம்தேதி மாலை 7 மணிக்கு கன்வென்ஷன் கூட்டத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து 24ம் தேதி காலை 11மணிக்கு மகளிர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவிருந்து ஆராதனை மற்றும் பெண்கள் ஸ்தோத்திர ஆராதனை சிறப்பு செய்தியை நாகராஜபுரம் சேகர குரு பில்லி ஜெயராஜ், சாயர்புரம் செய்தியாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னின்று நடத்தினர். 25ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை சிறப்பு திருவிருந்து ஆராதனையை சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட் ராஜ் நடத்தினார். காலை 9 மணிக்கு ஞானஸ்தான ஆராதனை மற்றும் சிறுவர் பண்டிகையை ஆறுமுகநேரி சேகர குரு ஸ்டான்லி சாம் ஜெபத்துரை மற்றும் பாலியர் நண்பன் செயலர் எமில் சிங் ஆகியோர் நிகழ்தினர். வாலிபர் பண்டிகையை பூவரசு சேகர குரு ஜான்சன் மோசஸ் சாமுவேல் நடத்தினார். இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை ஜேக்கப் பஜனை பிரசங்கம் செய்தார். தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு அசன ஆயத்த ஆராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அசன விருந்து நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆறுமுகநேரி சேகர குருவானவர் ஸ்டான்லி சாம் ஜெபத்துரை, ஊழியர் தர்மராஜ் ஜசக், ஆலய பணிவிடையாளர், நிர்வாக கமிட்டியினர் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
The post ஆறுமுகநேரி காமராஜபுரம் பரி.இமானுவேல் ஆலய பிரதிஷ்டை விழாவில் அசன விருந்து appeared first on Dinakaran.
