ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை எதிரொலி திருப்பூர் பூ மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது-செவ்வந்தி பூ கிலோ ரூ.350 க்கு விற்பனை

திருப்பூர் : ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி திருப்பூர் பூமார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. செவ்வந்தி பூ கிலோ ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் பனியன் நிறுவனம் மற்றும் அதனை சார்ந்த நிறுவனம் அதிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை முதலே திருப்பூர் பூ மார்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள், தோரணங்களை வாங்கிச் செல்ல குவிந்தனர். திருப்பூர் பூ மார்கெட், தென்னம்பாளையம் கடைவீதிகளில் அதிகளவில் வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை,அரளி,செவ்வந்தி,செண்டுமல்லி,உள்ளிட்ட பூக்கள் வாகனங்களில் வந்து இறங்கின. அதனை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு குவிந்தனர். நேற்று வார விடுமுறை என்பதால் சில்லறை வியாபாரிகள்,பனியன் கம்பெனி மேலாளர்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். பூக்கள் மட்டுமின்றி பூசணிக்காய், தோரணங்களையும் வாங்கி சென்றனர். சில தினங்களுக்கு முனபு வரை கடும் விலை விழ்ச்சியில் இருந்த பூக்களின் விலை திடீரென்று உயர்வு கண்டுள்ளது. நேற்று நிலவரப்படி மல்லிகை கிலோரூ. 1000க்கும், செவ்வந்தி, ரூ.350 க்கும், அரளி ரூ.400க்கும் செண்டுமல்லி ரூ.150க்கும் விற்பனை ஆனாது. ஒரு நாட்களுக்கு முன்பே வியாபாரம் களைக் கட்டியுள்ளதால், பூ வியாபாரிகள், பழக்கடைக் கடைக்காரர்கள், சுவிட்ஸ் கடைகள், மற்றும் மளிகை கடைகள் என அனைத்து தரப்பு வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை எதிரொலி திருப்பூர் பூ மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது-செவ்வந்தி பூ கிலோ ரூ.350 க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: