திருமங்கலம் பகுதியில் ஆடிபட்ட விவசாய பணி தீவிரம்

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிபட்டத்தினையொட்டி விதை புபணிக்காக விவசாயிகள் தங்களது வயல்களை உழவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான சாத்தங்குடி, கரடிக்கல், உரப்பனூர், சித்தாலை, சுங்குராம்பட்டி, கீழக்கோட்டை, நடுக்கோட்டை, கரிசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆடிப்பட்டத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆடிமாதம் பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தங்களது வயல்களை மாடுகள் மற்றும் டிராக்டர் கொண்டு உழுது வருகின்றனர். ஆடிபட்டத்தில் மழை பெய்து இந்தாண்டு விவசாயம் பெருகும் என்ற நம்பிக்கையில் பணிகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். விவசாயி கந்தசாமி கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஆடிபட்டத்திற்கான விதைகளை வாங்கி ஆடி 1 மற்றும் 18ம் தேதி விதைப்பது வழக்கம். இந்தாண்டு வரும் 17ம் தேதி ஆடிபிறப்பதால் மழையை எதிர்பார்த்து இப்போதே உழவு பணிகளை செய்து வருகிறோம்’’ என்றார்.

மானியத்தில் விதைகள்

திருமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் சுருளிமலை, வேளாண்மை அலுவலர் புவனேந்திரன் கூறுகையில், ‘‘திருமங்கலம் பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆடிபட்டத்தில் உளுந்து, சோளம், மக்காசோளம், நிலக்கடலை வரகு, தினை, குதிரைவாலி உள்ளிட்டவைகளை பயிரிடுவது வழக்கம். இந்தாண்டு வழக்கம் போல் ஆடிபட்டத்திற்கு தங்களது வயல்களை உழுதுபோட்டு காத்திருக்கின்றனர். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கடலை, உளுந்து, பாசிபயிறு, நெல் விதைகள் மானியத்தில் வழங்க தயார் நிலையில் உள்ளோம் விவசாயிகள் பெற்று கொள்ளலாம்’’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: