விருதுநகர், ஜூன் 23: விருதுநகரில் ஆதித்தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் கந்தன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் விஸ்வை குமார் சிறப்புரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட, நகர, ஒன்றிய கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
காலனி என்ற பெயரை அரசு ஆவணங்களிலிருந்து நீக்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தும், ஆர்எஸ்எஸ் பின்புலமாக உள்ள மதுரை முருக பக்த மாநாட்டை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், கோவையில் ஜூலை 13ம் தேதி ஆதி தமிழர் கட்சி சார்பாக நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் மக்களைத் திரட்டி திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில இளைஞரணி செயலாளர் விருதை வசந்தன், தென்மண்டல தலைவர் சுப்புராஜ், மகளிர் அணி தலைவி செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஆதித்தமிழர் கட்சி செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.
