ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

ஜெயங்கொண்டம், ஜூன் 23: இது தொடர்பாக ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூர், பெரியகருக்கை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, மருக்காளங்குறிச்சி, வடுகர்பாளையம், கவரப்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, சூரக்குழி, கீழநெடுவாய், புக்குழி, சாத்தனப்பட்டு, பெரியதத்தூர், தஞ்சாவூரான்சாவடி, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, குப்பம், குடிகாடு, குளத்தூர், இடையக்குறிச்சி, தேவனூர், வல்லம், கல்வெட்டு, அகினேஸ்புரம், இராங்கியம், பெரியாத்துக்குறிச்சி, கருக்கை, நாகம்பந்தல், ராமன் மற்றும் பாப்பாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகர் கோயில், வேம்புகுடி, முத்துசேர்வமடம், சலுப்பை, சத்திரம், வெத்தியார்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூர், வெண்ணங்குழி, வாழ குட்டை, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக் கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: