ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்களை சிவில் நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்களை சிவில் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சீல்நாயக்கன்பட்டி கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சந்திரன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், ‘‘கிராமங்களில் இருதரப்பினருக்கு இடையேயான நடைபாதை பிரச்னை, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை தொடர்பான மனுக்கள் இங்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகளை சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றங்களில் தான் தாக்கல் செய்ய வேண்டும். ஐகோர்ட்டில் பொதுநல வழக்காக தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. கிராமங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால், முதலில் தாசில்தாரிடம் மனு அளிக்க வேண்டும். பின்னர் கலெக்டரிம் மனு அளிக்க வேண்டும். இதற்கான முறையை பின்பற்ற வேண்டும்’’ என கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்….

The post ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்களை சிவில் நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: