அறிவியல் கண்காட்சி

பழநி, ஜூலை 4: பழநி அருகே ஐவர் மலை பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஐஐடி இயக்குநர் காமகோடி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்திய பாரம்பரிய விஞ்ஞானத்தை எடுத்து காட்டும் வகையில் கணிதம், வானியல், ஆயுர்வேதம், கட்டிடக்கலை, மொழியியல், மரபு வேளாண்டை, மாற்று எரிவாயு உற்பத்தி, உயிர்வாயு உற்பத்திக்கான ஆலை, சூழலியல் தொடர்பான செய்முறை விளக்கங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 1200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.

The post அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: