அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை, ஜூன் 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை ஆயிரத்து முன்னூறு மாணவிகள், 50 ஆசிரிய, ஆசிரியைகள் அலுவலக பணியாட்கள் உள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினசரி நடந்து செல்லும் சூழ்நிலையில் ஊர் எல்லை நின்று கொண்டு பெண் பிள்ளைகளை ஆண்கள் கிண்டல் செய்வதும் பின்தொடர்வதும் வழக்கமாக உள்ளது.

மாணவிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பெண்கள் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் இணைப்பை காவல் நிலையத்தில் பொருந்தி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும என்றும், மேலும் காலை மாலை வேலைகளில் காவல் துறையினர் காவல்துறை வாகனத்தில் ரோந்து சென்று பெண்பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

The post அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: