அரசு தொடக்கப் பள்ளி அருகே பழுதடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க கோரிக்கை

ஒரத்தநாடு, ஜூலை 9: அரசு தொடக்கப்பள்ளி அருகே பழுதடைந்த நீர் தேக்கத் தொட்டியை உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அதிகாரிகள் கோரிக்கைவைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் கீழத்தெரு அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள 20 ஆண்டுகளுக்கு முனபு கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் தருவாயில் உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்த நீர்த்தேக்க தொட்டியின் கீழே பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை மற்றும் காலை பிரேயர் நடத்தி வருவதாகவும் இந்த நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அகற்றாவிட்டால் மிகப்பெரிய விபத்தும் ஏற்படும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post அரசு தொடக்கப் பள்ளி அருகே பழுதடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: