அரசு ஆடவர் கல்லூரியில் ஐம்பெரும் விழா

கிருஷ்ணகிரி, மே 6: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, நுண்கலை, பேரவை நிறைவு விழா என ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அனுராதா தலைமை வகித்து பேசுகையில், ‘1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி பொன்விழா கடந்து பல்வேறு சாதனைகளை பெற்றுள்ளது. மாணவர்கள் விளையாட்டு, கல்வி உள்ளிட்டவற்றில் மாவட்ட, மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 30 பேர் இதே கல்லூரியில் பேராசிரியர்களான பெருமை இக்கல்லூரிக்கு உள்ளது,’ என்றார்.

நிகழ்ச்சியில், பாலக்கோடு எம்.ஜி.ஆர்., கலைக்கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி, இலக்கியமும்- நகைச்சுவையும் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து கல்வி, விளையாட்டு, நுண்கலை மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை பேராசிரியர் ராஜா, உதவி பேராசிரியர் சரிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பேராசிரியர் ரவி வரவேற்றார். மாணவர் பேரவைத் தலைவர் இலங்கேஸ்வரன் நன்றி கூறினார்.

The post அரசு ஆடவர் கல்லூரியில் ஐம்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: