அம்மையநாயக்கனூர் அருகே ரேஷன் கடை கட்ட பூமிபூஜை எம்பி தலைமையில் நடந்தது

 

நிலக்கோட்டை, ஜூலை 7: அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மாவுத்தன்பட்டியில் ரேஷன் கடை கட்டிடம் அமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆலோசனைப்படி, பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் பரிந்துரைப்படி, திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் புதிய ரேஷன் கடை கட்ட ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக மாவுத்தன்பட்டியில் எம்பி சச்சிதானந்தம் தலைமையில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமிபூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கின.இந்த நிகழ்வுக்கு பேரூராட்சி தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பூங்கொடி முருகு, கவுன்சிலர் தேவி திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் நிர்வாகி அஜய்கோஸ், செளந்தர்ராஜன், காளிமுத்து, கணேசன், ஆனந்தன், முத்துச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அம்மையநாயக்கனூர் அருகே ரேஷன் கடை கட்ட பூமிபூஜை எம்பி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: