பரமக்குடி, ஜூன் 30: அதிமுக பரமக்குடி நகர் செயலாளராக ஐ.வின்சென்ட் ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பரிந்துரையின் பேரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இவரை நியமனம் செய்துள்ளார். வின்சென்ட் ராஜா ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராகவும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். நகர் செயலராக பொறுப்பேற்றுள்ள வின்சென்ட் ராஜாவிற்கு, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், நகரின் முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post அதிமுக பரமக்குடி நகர் செயலாளர் நியமனம் appeared first on Dinakaran.
