அட்டாரி-வாகா அணிவகுப்பு; ஜன.1 முதல் ஆன்லைன் புக்கிங்

புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள அட்டாரி-வாகா பகுதியில் நடக்கும் எல்லை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அணிவகுப்பை பார்வையிடுவதற்கு 2 நாட்கள் (48 மணி நேரம்) முன்னதாக, //attari.bsf.gov.in என்ற இணையதளத்தில் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்து ஆன்லைன் மூலம் புக் செய்ய வேண்டும். ஒரு குழுவிற்கு 12 பேர் வீதம் அனுமதிக்கப்பட இருப்பதாக எல்லை பாதுகாப்பு படையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறையின் கீழ், முன்பதிவின்றி செல்லும் மக்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டினால் அணிவகுப்பை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்….

The post அட்டாரி-வாகா அணிவகுப்பு; ஜன.1 முதல் ஆன்லைன் புக்கிங் appeared first on Dinakaran.

Related Stories: