சென்னை: கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிக்க, பலராம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள ‘நிறம்’ என்ற படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாடகிகள் ஸ்ரீநிஷா, பிரவஸ்தி, டான்ஸ் மாஸ்டர் சாய் பாரதி, நடிகை தான்யா ஹோப், நடிகர் நிதின் சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். கே.பிந்து மாதவி, பி.ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
விழாவில் பலராம் கிருஷ்ணா பேசுகையில், ‘நிறம் என்பது, ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் என்பதை ெசால்கிறது. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடலும், கேரக்டரும் கதைக்காகவே உருவாகியுள்ளது’ என்றார். ஹீரோ முகேன் ராவ் பேசும்போது, ‘இது ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர்.
என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. அதிக சுதந்திரம் கொடுத்து, நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இமான் இசையில் நடிப்பது கனவாக இருந்தது. அது இன்று நிறைவேறியுள்ளது. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறுவேன். ஹீரோவாக மட்டுமின்றி, கதைக்கு முக்கியத்துவம் கொண்ட எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன்’ என்றார்.
