மறுமணத்தை ஆதரித்து, உண்மைச் சம்பவ அடிப்படையில் சசி எழுதி இயக்கிய படம், ‘நூறு சாமி’. விஜய் ஆண்டனி ஜோடியாக சுவாசிகா நடித்தார். அனைத்து தரப்பு ரசிகர்களும் அமோக வரவேற்பு கொடுத்துள்ள இப்படத்தை பற்றி சுவாசிகா கண்கலங்கி பேசினார். ‘தமிழ் மக்களுக்கு எனது நன்றி. என்மீது உங்களுக்கு எவ்வளவு பாசமும், அன்பும் இருக்கிறது என்பதை ‘லப்பர் பந்து’, ‘மாமன்’, ‘நூறு சாமி’ ஆகிய படங்களின் மூலம் தெரிந்துகொண்டேன். சசி சார் எப்படி என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து, இவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்தார்? விஜய் ஆண்டனி சார் எப்படி இதற்கு சம்மதித்தார் என்று எனக்கு தெரியவில்லை.
எல்லாமே கனவு மாதிரி இருக்கிறது. ஆனால், இந்த நாளுக்காகத்தான் இத்தனை காலம் நான் காத்திருந்தேன். எனக்கான ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள் தரும் ஆதரவுதான். இனிமேல் கூடுதல் பொறுப்புடன் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன். படத்தின் ஹீரோவே நான்தான் என்று சொல்கிறார்கள். ‘நூறு சாமி’ என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம். இதில் பேசப்பட்ட விஷயங்களும் மிகவும் முக்கியமானவை. ஒரு நடிகையாக எனக்கு எப்போதும் உங்கள் பாசத்தையும், ஆதரவையும் கொடுங்கள். கண்டிப்பாக நான் இன்னும் கடினமாக உழைத்து, உங்களை ஏமாற்றாமல், நிறைய நல்ல கேரக்டர்களில் நடிப்பேன்’ என்றார்.
