பாலிவுட் முன்னணி நடிகை மிருணாள் தாகூர், தென்னிந்திய மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக தனுஷுடன் அவரை இணைத்து பேசப்பட்டதால் அப்செட்டான அவர், தமிழில் தனுஷ் இயக்கும் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் மூலம் மீண்டும் டென்ஷனாகி விட்டார். காரணம், தற்போது தனுஷ் மீண்டும் படம் இயக்கும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மிருணாள் தாகூர், ‘நிஜமான மகிழ்ச்சி என்பது, நம்மிடம் இருப்பதை, இல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டுமே இருக்கிறது.
மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும், முடிந்தவரைக்கும் வறுமையில் இருப்போருக்கு தேடிச்சென்று உதவி செய்ய வேண்டும். கர்மா மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. செய்யும் உதவிக்கு பலன் எதிர்பார்ப்பது இல்லை. எனது உதவி, யாருக்காவது மகிழ்ச்சி அளித்தால் போதும்’ என்று பேசி, தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
