சகோ கணேசன் இயக்கத்தில் விதார்த், கலையரசன், திரிகுன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் கிரைம் திரில்லராக உருவான படம், ‘மூன்றாம் கண்’. வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடித்தது குறித்து அதுல்யா சந்திரா கூறுகையில், ‘தலைப்பு எனக்கு பிடித்ததால் நடித்தேன். ஒவ்வொரு படத்திலும் நிறைய புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். இதில் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்’ என்றார். தேஜு அஸ்வினி கூறும்போது, ‘இது என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம்.
கதையும், கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்ததால் நடித்தேன். சகோ கணேசன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார். புரமோஷன் பாடலில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை தயங்காமல் செய்’ என்று டான்ஸ் மாஸ்டர் முழு சுதந்திரம் கொடுத்தார். இதுவரை நான் நடித்த படங்களில், மிகவும் வித்தியாசமான கதைகொண்ட படம், ‘மூன்றாம் கண்’. இப்படத்தில் இடம்பெறும் ஒரு கொலையில் நான்கு பேர் சம்பந்தப்படுகின்றனர்.
ஆனால், கொலையாளி யார் என்பதை ரசிகர்களே கண்டுபிடிக்க வேண்டும். இதுபோல் ஒரு வித்தியாசமான கதை, இதற்கு முன்பு எந்த மொழியிலும் வந்தது இல்லை என்று சொல்கின்றனர். ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
