மும்பை: சைப் அலிகான், தீபிகா படுகோன் நடித்து வெற்றி பெற்ற படம் காக்டெயில். இதன் இரண்டாம் பாகமாக காக்டெயில் 2 உருவாகியுள்ளது. இந்த இந்தி படத்தில் ஷாஹித் கபூர், கிரித்தி சனோன் ஆகியோருடன் ராஷ்மிகாவும் நடித்திருக்கிறார். அவர் கூறும்போது, “இதில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கேரக்டர் ஆரம்பத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இதுவரை நான் நடித்த படங்களில், அதிகமாக நகர்ப்புற தோற்றத்தில் நடித்ததில்லை. இதில் முழுவதும் அப்படிப்பட்ட தோற்றம் என்பதால் யோசித்தேன்.
இதுவரை நடித்த படங்களின் காரணமாக, ரசிகர்கள் சீரியஸான அல்லது எமோஷனலான நடிப்பை என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். அதை விடுத்து, முதல்முறையாக நட்பு, காதல், கொண்டாட்டம் நிறைந்த கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ‘இது நமக்கு சரியாக இருக்குமா?” என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
