கணவரின் காலில் விழுவதா? சர்ச்சையில் சிக்கிய சுவாசிகா

‘லப்பர் பந்து’, ‘மாமன்’, ‘கருப்பு’ உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை சுவாசிகா, டி.வி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். டி.வி நடிகர் பிரேம் ஜேக்கப்பை காதல் திருமணம் செய்துள்ள அவர் அளித்த பேட்டியில், ‘தினமும் காலையில் எழுந்ததும் கணவரின் காலில் விழுந்து வணங்குவேன்’ என்றார். இப்படி அவர் பேசியது பலரை கேள்வி கேட்க வைத்துள்ளது. ‘பெண்களின் முன்னேற்றம் என்பது இதுதானா? கணவரின் காலில் விழுந்து வணங்குவது எந்த காலத்து சிந்தனை?’ என்று விவாதித்து வருகின்றனர். வேறு சிலர், ‘அது சுவாசிகாவின் தனிப்பட்ட விருப்பம். அதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை’ என்று பேசியுள்ளனர்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மலையாள யூடியூப் சேனல் ஒன்றில், ‘வீட்டில் இருந்தால். என் கணவருக்கு நானே சமைத்து கொடுப்பேன். எல்லா பாத்திரங்களையும் நானே கழுவுவேன். அது எனக்கு பிடிக்கும். அதில் எந்த சிரமமும் இல்லை. எனக்கு வங்கியில் பணம் இருக்கிறது. ஆனால், செல்போன் பில் கட்ட கணவரிடம்தான் சொல்வேன். எனக்கு பணம் தேவைப்பட்டாலும் அவரிடம்தான் கேட்பேன். என்னிடம் பணம் இருந்தாலும், அவர் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்’ என்று பேசி, மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த சுவாசிகா, ‘நான் செய்யும் விஷயங்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. இது என் வாழ்க்கை, எனக்கு இப்படித்தான் இருக்க பிடித்திருக்கிறது. இது என் ஃபேண்டஸியாக கூட இருக்கலாம். அதை நான் விரும்புகிறேன். ஒன்பது வயதில் இருந்தே சம்பாதிக்கிறேன். எல்லா விஷயங்களையும் நானே பார்த்துக்கொண்டேன். இப்போது கணவரை சார்ந்து இருப்பதில், வெளியே சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் இருக்கிறது’ என்றார்.

Related Stories: