×

மஞ்சு வாரியரை அடையாளம் காணாத மக்கள்

மலையாள லேடி சூப்பர் என்று சொல்லப்படும் மஞ்சு வாரியர், சில வருடங்களுக்கு முன்பு வரை இருசக்கர வாகனம் கூட ஓட்ட தெரியாமல் இருந்தார். பிறகு அஜித் குமாருடன் ‘துணிவு’ படத்தில் நடித்தபோது, அவருக்கு பைக் ஓட்டுவது குறித்த நுணுக்கங்களை அஜித் குமார் கற்றுக்கொடுத்தார். பிறகு மஞ்சு வாரியார் லைசென்ஸ் வாங்கி, தனியாக புல்லட் ஓட்டும் அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அவர் குதிரையேற்ற பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எர்ணாகுளத்தில் இருந்து 18 கி.மீ தூரத்தில் இருக்கும் ஆலுவாவுக்கு தினமும் காலை நேரத்தில் தனது ஸ்கூட்டியில் பயணித்த மஞ்சு வாரியர், அங்கு தினமும் குதிரையேற்றம் கற்றுக்கொண்டார்.

‘லாரா’ என்ற குதிரையின் மூலமாக ஜார்ஜ் டயர்ஸ் என்பவர் அவருக்கு பயிற்சி அளித்தார். ஒரே வாரத்தில் குதிரையேற்றத்தை கற்றுக்கொண்ட மஞ்சு வாரியர், தற்போது யாருடைய துணையும் இல்லாமல் குதிரை ஓட்டும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். மலையாள நடிகர்கள் சன்னி வெய்ன், சிஜூ வில்சன் ஆகியோரும் மஞ்சு வாரியருடன் இணைந்து குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். இது, அடுத்து மஞ்சு வாரியர் நடிக்கும் மலையாள படத்துக்காக மேற்கொண்ட பயிற்சி என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாத காலம் பயிற்சிக்கு வந்து சென்ற மஞ்சு வாரியரை, அதிகாலை நேரம் என்பதால், அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒருவர் கூட அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

Tags : Manju Warrier ,Lady Super ,Ajith Kumar ,Ernakulam ,
× RELATED அமானுஷ்ய கேரக்டரில் நடிக்கும் தமன்னா