மலையாளத்தில் அதிக வரவேற்பு பெற்றுள்ள ரியா ஷிபு, விரைவில் தமிழில் அறிமுகமாகிறார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விக்ரமுடன் நடிப்பவர்கள் தேர்வு நடக்கும் நிலையில், முக்கிய கேரக்டரில் ரியா ஷிபு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஹிட்டான ‘சர்வம் மாயா’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்த ரியா ஷிபு, விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ என்ற படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விக்ரம் படத்தில் ஹீரோயினாக இல்லாமல், ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடந்து முடிகிறது.
