×

பேச முடியாமல் தவிக்கும் வித்யா பாலன்

இந்திய திரையுலகில் மறக்க முடியாத நடிகரான இர்ஃபான் கான், கடந்த 2020ல் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி அவரது 6வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அன்று யாரும் எதிர்பாராத ஸ்பெஷலான விஷயமாக இர்ஃபான் கான், வித்யா பாலன் நடித்த `தி லாஸ்ட் டெனன்ட்’ என்ற படம் யூடியூபில் வெளியிடப்பட்டது. கடந்த 2,000ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், படமாக்கப்பட்ட காட்சிகள் தொலைந்துவிட்டதால் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில், இயக்குனரும், தயாரிப்பாளருமான சார்த்தக் தாஸ்குப்தா, படத்தின் காட்சிகள் அடங்கிய விஹெச்எஸ் கேசட்டை கண்டுபிடித்தார். 25 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன படத்தை தற்போது மீட்டு, அதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். படத்தை பார்த்த வித்யா பாலன், ‘25 ஆண்டுகளுக்கு முன்பு நான் தொட்டதெல்லாம் கைகூடாத நேரத்தில் இச்சம்பவம் நடந்தது. எனது முதல் மலையாள படமான ‘சக்ரம்’ கிடப்பில் போடப்பட்டது. பிறகு 12 படங்களில் எனக்கு பதிலாக வேறு சிலர் நடிக்க வைக்கப்பட்டனர். மனம் வெறுத்த நான், `தி லாஸ்ட் டெனன்ட்’ படத்தை மறக்க விரும்பினேன். கடந்த வாரம் யூடியூபில் வெளியான, அதுவும் இர்ஃபான் கானின் மறைவுக்கு பிறகு வெளியான படத்தை பார்த்தேன். கடந்த கால நினைவுகள் கண்முன் நிழலாடியது. என்னால் இதுகுறித்து எதுவும் பேச முடியவில்லை’ என்றார்.

Tags : Vidya Balan ,Irrfan Khan ,YouTube ,Sarthak ,
× RELATED அமானுஷ்ய கேரக்டரில் நடிக்கும் தமன்னா