×

மமிதா பைஜு எடுத்த துணிச்சலான முடிவு

 

சென்னை: மலையாளம் மற்றும் தமிழில் வெற்றிபெற்ற ‘பிரேமலு’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த மமிதா பைஜு, தமிழில் விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘பெத்லேகம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘பிரேமலு’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நஸ்லென் கே.கபூர், சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதே படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக காமெடி வேடத்தில் நடித்திருந்த சங்கீத் பிரதாப், தற்போது ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது ேஜாடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் மமிதா பைஜு, திடீரென்று காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிப்பது அவரது துணிச்சலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தொடக்க விழா பூஜை கொச்சியில் நடந்தது. டினார் பவுலோஸ் இயக்குகிறார். இவர், 2019ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ என்ற படத்துக்கு கதை எழுதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

 

Tags : Mamita Baiju ,Chennai ,Vijay ,Suriya ,Vishnu Vishal ,Nivin Pauly ,Nazlen K. Kapoor ,Sangeet Pratap ,
× RELATED வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஊர்வசி ரவுடேலா