×

கான் சிட்டியில் வெளியான நான் தான் கிங்கு பாடல்

 

சென்னை: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் நடித்துள்ள படம், ‘கான் சிட்டி’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘ரா ரா ரங்கையா’ என்ற பாடல் வைரலான நிலையில், தற்போது 2வது சிங்கிளான ‘நான் தான் கிங்கு’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஷான் ரோல்டன் இசையில் மோகன் ராஜன் எழுதியுள்ள இப்பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா இணைந்து பாடியுள்ளனர். ஹீரோவின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம், ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பாடல் உருவாகி இருக்கிறது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கிய ஒரு குடும்பத்தின் பிரச்னைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு மங்களூரு, சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

 

Tags : Harish Durairaj ,Power House Pictures ,Arjun Das ,Anna Ben ,Yogi Babu ,Vadivukkarasi ,Akilan ,Mohan Rajan ,Shaun Roldan ,Kelithi ,Lalitha Sudha ,
× RELATED வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஊர்வசி ரவுடேலா