- சென்னை
- விஜய் தேவரகொண்டா
- கீர்த்தி சுரேஷ்
- இந்தியா
- தில் ராஜு
- ஷிரிஷ்
- வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
- ரவி கிரண் கோலா
சென்னை: விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் கிராமத்து ஆக்ஷன் கதை கொண்ட பான் இந்தியா படம், ‘ரவுடி ஜனார்த்தனா’. இதை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ, ஷிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கதை எழுதி ரவி கிரண் கோலா இயக்குகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது.
அதில் விஜய் தேவரகொண்டா மழையில் நனைந்து, கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமாக இருக்க, அவரது நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷ் தோன்றுகிறார். இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் மற்றும் ஆக்ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது. ஆனந்த் சி.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
