பிரியங்காவை கண்டுகொண்ட அதிபர்

பிரியங்கா மோகன் நடித்த ‘மேட் இன் கொரியா’ என்ற படம் நெட்பிளிக்சில் வெளியானது. படப்பிடிப்பு முழுவதும் தென்கொரியாவில் நடந்தது. இதுகுறித்து பிரியங்கா மோகன் கூறுகையில், ‘ராஷ்டிரபதி பவனில் முக்கியமானவர்கள் சிலருடன் அமர்ந்து உணவு அருந்தியது ஒரு கனவு போல் இருந்தது. தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங், அவரது மனைவி கிம் ஹீ கியுங் ஆகியோர், ‘மேட் இன் கொரியா’ படத்தை பாராட்டினர். அதிபர் என்னை பார்த்து, ‘நான் உங்கள் படத்தை பார்த்தேன்’ என்றார்.

அவரும், அவரது மனைவியும் என்னை பாராட்டியது, எனது வாழ்நாளில் மறக்க முடியாத விஷயமாகும். அப்படத்தில் என் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்தேன். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. இப்படம் எல்லைகளை தாண்டி இவ்வளவு தூரம் சென்றடையும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு நாட்டின் அதிபர் எனது படத்தை பார்த்திருக்கிறார் என்பதும், நான் ராஷ்டிரபதி பவனில் இருப்பேன் என்பதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்’ என்றார்.

Related Stories: