பாலிவுட்டில் மாஃபியா ஆதிக்கம்: தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு

மும்பை: பாலிவுட்டில் மாஃபியா கும்பல் தீவிரமாக செயல்படுவதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பாலிவுட்டின் மாஃபியா கும்பலுக்கு ஈகோ அதிகம். நீங்கள் அவர்களின் வழியைப் பின்பற்றவில்லை என்றால், அவர்கள் உங்களை எதிரியாகப் பார்ப்பார்கள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட விரும்புபவர்கள் குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்.

சில சக்திவாய்ந்த மனிதர்கள் உங்கள் விதியைத் தீர்மானிக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்படாவிட்டால், அவர்கள் உங்கள் வாழ்க்கையையும் தொழிலையும் அந்தப் பகுத்தறிவற்ற தீய சக்திகள் அழித்துவிடுவார்கள். அவர்களிடம் எந்த தர்க்கமும் இருக்காது. மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதும் துன்புறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். நீங்கள் அவர்களோடு சேர்ந்து செயல்படாவிட்டால் உங்களை அந்நியன் என்று முத்திரை குத்துவார்கள்.

நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் உங்களை வெளியே தள்ளிவிடுவார்கள். திரைப்படங்களில் இத்தகைய யதார்த்தங்கள் காட்டப்படும் போதும், உலகளவில் எப்ஸ்டீன் போன்ற வழக்குகள் வெளிவரும் போதும், அதற்கும் நிஜத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கவே செய்கிறது. வெற்றியைப் பார்த்த ஒருவர் திடீரென்று ஏன் பாலிவுட் மாஃபியாவிடம் சரணடைய வேண்டும்? ஆனால் இங்கு அப்படித்தான் நடக்கிறது. இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார்.

Related Stories: