மலையாளத்தில் சவின் எஸ்.ஏ இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் கடந்த 2ம் தேதி திரைக்கு வந்த படம், ‘வாழ 2’. 2024ல் வெற்றிபெற்ற ‘வாழ’ படத்தின் 2ம் பாகமான இது, மலையாளம், தமிழ், தெலுங்கில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 3ம் பாகத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண், ‘வாழ 2’ படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறகு அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமீபத்தில் ‘வாழ 2’ படக்குழுவினரை சந்தித்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம், தெலுங்கு ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. விபின் தாஸ், இயக்குனர் சவின் எஸ்.ஏ மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
