எனது ஓட்டை திருடிட்டாங்க: அக்‌ஷயா ஹரிஹரன் புகார்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, நடிகை அக்‌ஷயா ஹரிஹரன் தனது வாக்கை யாரோ பதிவாகிவிட்டதாகக் கூறிப் புகார் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி தொகுதியைச் சேர்ந்த அவர், அடையாறு வாக்குச்சாவடிக்குச் சென்றபோது, தனது பெயரில் வேறொரு பெண் வாக்களித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனது பெயரில் வாக்குச்சாவடி ஆவணங்களில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை அக்‌ஷயா கண்டறிந்தார். அந்தப் பெண்ணின் வயது மற்றும் பிற விவரங்கள் சரியாக இருந்த போதிலும், புகைப்படம் மட்டும் வேறாக இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ‘‘ஆவணங்கள் சரியாக இருந்தும், புகைப்படம் மாறியிருப்பதை அதிகாரிகள் ஏன் கவனிக்கவில்லை? எப்படி வேறொருவர் என் பெயரில் வாக்களிக்க முடியும்?’’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு தேர்தல் ஆணையத்துக்கு புகார் கூறியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், தேர்தல் அதிகாரிகள் செய்யும் தவறுக்கு பிரபலங்களும் தப்பவில்லை என கமென்ட் செய்து வருகிறார்கள்.

Related Stories: