சென்னை: தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 2040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2026-27ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 19ம்தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி முடிந்தது. மொத்தம் 5,900 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 3,036 பேர் மட்டுமே விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை முழுமை செய்திருந்தனர்.
அவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31ம் தேதி வெளியிடப்பட்டது. தரவரிசையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 4 (இன்று) முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி கல்வி ஆணையரகம் அறிவித்திருந்தது. அதன்படி ஆன்லைன் கலந்தாய்வு ஆக.4ம் தேதி (செவ்வாய்) தொடங்குகிறது. இக்கலந்தாய்வு 10ம் தேதி முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 14ம் தேதி அன்று ஆன்லைனில் வழங்கப்படும்.
