இ20 பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ.30 மிச்சம்: ஒன்றிய அரசு தகவல்

 

புதுடெல்லி: ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 135 அமெரிக்க டாலராக உயர்ந்தபோது, ​​எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோலுடன் எத்தனாலலைக் கலக்காமல் இருந்திருந்தால், டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்திருக்கக்கூடும்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, இ20 பெட்ரோல் பயன்பாடு சில்லறை எரிபொருள் விலையில் கடுமையான உயர்வைத் தடுத்தது மட்டுமல்லாமல், நெருக்கடியின் உச்சத்தில் நுகர்வோருக்கு லிட்டருக்கு சுமார் ரூ.30 சேமிப்பையும் அளித்தது. எத்தனால் கலப்பின் நோக்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலையைக் குறைப்பதே ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: