என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்: மோடி பேச்சு

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டங்களின்போது டெல்லி ஜந்தர் மந்தரில் என்னையும், எனது தாயையும் வசைபாடியவர்களை மன்னிக்க விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: சமூகத்தில் நிலவும் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜந்தர் மந்தரில் நான் மட்டுமல்ல, என் மறைந்த தாயாரும் கூட வசைபாடப்பட்டோம். ஆனால் வசைகள் எதையும் தீர்ப்பதில்லை.

தவறான பாதையில் சென்றவர்களை நாம் வழிநடத்துவோம். அவர்களைத் தண்டிப்பதோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதோ சிக்கலைத் தீர்க்காது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். ஆனால் நம் வீட்டுப் பெண்கள் இத்தகைய வசைமொழிகளைப் பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கலாம்.

தவறான பாதையில் சென்ற நம் இளைஞர்களை நாம் மன்னிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் நம் பிள்ளைகள். பற்கள் நம் நாக்கைக் கடித்தாலும் நாம் அவற்றை உதறித் தள்ளுவதில்லை. இரண்டும் நமக்குச் சொந்தமானவை. அதுபோலவே நம் இளைஞர்களும் நமக்குச் சொந்தமானவர்களே, என மோடி கூறினார்.

Related Stories: