தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு – காவிரி ஆணையம் அதிரடி

டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு, காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர்.

கர்​நாட​கா​வில் தென்​மேற்கு பருவ மழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி உள்ளிட்ட முக்கிய அணை​களில் 50% அளவுக்கு மட்​டுமே நீர் இருப்பு உள்​ளது. பெங்​களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்​டுமே நீர் இருப்​பு உள்ள காரணத்தால், தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்​து​விட முடியாது என கர்நாடகம் தெரிவித்தது.

ஆனால் கர்நாடகாவின் வாதத்தை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உச்சநீதிமன்ற உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்து​விட வேண்​டும். மழை பற்​றாக்​குறை இருக்கிறது, எனினும் அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ற​வாறு இரு மாநிலங்களும் நீரை பங்கிட்​டுக் கொள்ள வேண்​டும். கிருஷ்ண​ ராஜ​சாகர் மற்​றும் கபினி ஆகிய அணை​களிலிருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும் என நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று, தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: