திருவாரூர் ஜுலை 27: திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுக்கா கோட்டூர், வண்டாம்பாளையம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவிகித அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வியில் சேர்ந்து பயில்வதற்கான நேரடி சேர்க்கை வரும் 31ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது. விண்ணப்பக்கட்டணமாக ஓர் ஆண்டு பிரிவிற்கு ரூ.235ம், இரண்டு ஆண்டு பிரிவிற்கு ரூ 245ம் செலுத்த வேண்டும்.
இதற்கு வயது வரம்பாக ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரையிலும், தமிழ்புதல்வன் மற்றும் புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ ஆயிரம் வழங்கப்படும். படித்துமுடித்தபின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் அரசால் வழங்கப்படும். மேலும் விவரம் அறிய 04366 227411, 9965342967 மற்றும் 9843613755, 9865072426 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
