பணம் வைத்து சூதாடிய 13 பேர் மீது வழக்குப்பதிவு: ரூ.44 ஆயிரம் பறிமுதல்

 

பெரம்பூர், ஜூலை 27: ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கோவிந்தன் நான்காவது தெரு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் சமய் சிங் மீனாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரது தனிப்பட எஸ்ஐ முரளி சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 13 நபர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து 44 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 11 செல்போன்கள், 10 சீட்டு கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 13 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து, 13 பேர் மீதும் பிணையில் வரக்கூடிய வழக்கு பதிவு செய்து அவர்களை காவல் நிலைய ஜாமினில் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: