டி20 போட்டிகளுக்கான தரவரிசை இந்தியா மீண்டும் நம்பர் 1

துபாய்: சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அயர்லாந்துடன் நடந்த தொடரில் 0-2 என்ற கணக்கிலும், அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 0-4 என்ற கணக்கிலும் தொடரை பறிகொடுத்ததால் தரவரிசையில் 2வது இடத்துக்கு பின்தங்கியது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிராக 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், நேற்று 3வது போட்டிக்கு முன்பாக வெளியான தரவரிசை பட்டியலில் உலக சாம்பியனான இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தியா (268), இங்கிலாந்து (268), ஆஸ்திரேலியா (260), நியூசிலாந்து (247), தென் ஆப்ரிக்கா (244) டாப் 5ல் இடம் பிடித்துள்ளன.

Related Stories: