ஓம்சக்தி முருகன் கோயிலில் தீமிதி விழா

 

நாமகிரிப்பேட்டை, ஜூலை 18: நாமகிரிப்பேட்டை திம்மநாயக்கன்பட்டி அருகேயுள்ள வேப்பிலைக்குட்டை ஓம்சக்தி முருகன் கோயிலில், நடப்பாண்டு ஆடி முதல் வெள்ளியில் திருவிழா தொடங்கியது. இக்கோயிலில் ஆடி திருவிழாவின் போது, குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் வேண்டுதல்கள் வைப்பர். வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு குழந்தை பிறந்தால், எடைக்கு எடை காணிக்கை செலுத்தும் துலாபாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோயிலை சுற்றி உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

அதனை தொடர்ந்து, கோயில் பூசாரி ஓம்சக்தி முருகன் சுவாமி, தீ மிதித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஈரோடு, சேலம், திருச்சி, தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: