சென்னை: மழைப்பொழிவு குறைந்து வறட்சி நீடிப்பதால் அரிசி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. மழைப்பொழிவு குறைவால் விளைச்சல் பாதித்துள்ளதால் அரிசி விலை கிலோ ரூ.20 உயரும். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் 25 கிலோ அரிசி மூட்டை ரூ.200 முதல் ரூ.300 வரை உயர்ந்துள்ளது. ரூ.1,300க்கு கிடைத்த 25 கிலோ அரிசி மூட்டை தற்போது ரூ.1,600 வரை விலை அதிகரித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு அரிசி விலை உயர்வு தொடரும் என அரிசி வணிகர்கள் தகவல். ஆந்திரா, கர்நாடகாவில் அரிசி விலை உயர்வால் தமிழ்நாட்டிலும் அதிகரிக்கக் கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
