சிபிஎஸ்இ டிஜிட்டல் மதிப்பீடு உச்சநீதிமன்றம் கவலை

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் எனும் டிஜிட்டல் மதிப்பீடு முறையில் திருத்தியதில் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இதையடுத்து, டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கான தெளிவான விதிமுறைகளை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையால் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மதிப்பீட்டு முறையில் அமைப்புசார்ந்த குறைபாடுகள் இருப்பதாக கவலை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: