விகாஸ் பள்ளியில் மாணவர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

பவானி, ஜூலை 15: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், விஜய் விகாஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைவர், துணைத்தலைவர், விளையாட்டு அணிகளின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. பள்ளித்தலைவர் கலைச்செல்வன், தாளாளர் மற்றும் துணைத்தலைவர் பழனிசாமி, பொருளாளர் தவமணி ஆகியோர் மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

முதல்வர் சித்ரா பதவியேற்பு உறுதிமொழி வாசித்தார். முன்னதாக, பள்ளி கல்விசார் இயக்குநர் பழனிவேல் வரவேற்றார். நிறைவாக துணை முதல்வர் விஜயலட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: