மணலி: மணலியில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் மறியல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னை மணலி மண்டலம் 20வது வார்டு எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுவருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மணலி மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிடுதல், சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பிறகும் மின்தடை பிரச்னைக்கு தீர்வுஏற்படவில்லை.
இந்த நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு எம்ஜிஆர். நகர் பகுதியில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். இதுசம்பந்தமாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு தொடர்புகொண்டபோதும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து காமராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணலி போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
மணலியில் தொடர்ந்து மின்வெட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்