இன்று முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 16ம் தேதி வரை வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. மலையோர மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்து பெரிய அளவில் மழை பதிவாகவில்லை. கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மாலை நேரங்களில் லேசான மழை மட்டுமே பெய்தது. எனினும் மற்ற நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மழை எப்போது பெய்யும் என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றின் வேக​மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்று முதல் 18ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் பொது​வாக வறண்ட வானிலை நில​வக்​கூடும். அவ்​வப்​போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்​யக்​கூடும். அதேபோன்று, தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்று முதல் 16-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட ஓரிரு இடங்​களில் 7 டிகிரி பாரன்​ஹீட் அளவு வரை உயரக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக கோவை மாவட்​டம் சின்​னக்​கல்​லாரில் 2 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக் கூடும் என்பதால் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories: