சிறப்பு எஸ்ஐ தூக்குப்போட்டு தற்கொலை

சூலூர்: கோவை மாவட்டம் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தவர் மனோஜ் (54). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலம். மனைவி சிந்து (49) மற்றும் 2 மகன்களும் கடந்த ஒரு வருடமாக பாலக்காட்டில் வசிக்கின்றனர். மனோஜ் குமார் சூலூர் அருகே காங்கேயம்பாளையம், ராயல் அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் தனியாக தங்கியிருந்தார்.

குடும்பத்தை பிரிந்து தனியே இருந்ததால் மிகுந்த மனஉளைச்சலுடன் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற மனோஜ், செல்போனில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்ய போவதாக பேசி பதிவு செய்துவிட்டு வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: