ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பார்மர் மற்றும் பிகானர் மாவட்டங்களில் சர்வதேச எல்லையிலிருந்து 15 கிமீ சுற்றளவுக்குள் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களில் சட்டவிரோத மத வழிபாட்டு தலங்களை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, கடந்த மாதம் 18 முதல் 20ம் தேதிக்குள் 12 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.
இதற்கு அப்பகுதி இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்தவொரு எச்சரிக்கை முன்னறிவிப்பும் இன்றி மசூதிகள் இடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மசூதிகள் இடிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
