திருமலை: 2025-2026ம் நிதியாண்டில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் ரூ.1,738 கோடி உண்டியல் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மேலும் இந்த ஆண்டிற்கு ரூ.1,880 கோடி செலுத்துவார்கள் என அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். அயோத்தி ராமர் கோயில் காணிக்கை, நன்கொடை முறைகேடு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை எண்ணுவது முதல் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறுவது வரை பக்தர்களின் முழு நம்பிக்கையுடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முழுமையான வெளிப்படைத்தன்மையைப் இருந்து பராமரித்து வருகிறது.
2025-2026 நிதியாண்டில் ஏழுமலையான் கோயில் உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் ரூ.1.738 கோடி. இந்த ஆண்டு இது சுமார் ரூ.1.880 கோடியாக இருக்கும் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். 2025-2026 ஆம் ஆண்டில், திருமலை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ.130 கோடி நன்கொடைகளைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ.140 கோடி ரூபாய் நன்கொடைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமலை தேவஸ்தானம் தற்போது பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி ரொக்க வைப்புத்தொகையையும், 12 ஆயிரம் கிலோ தங்க வைப்புத்தொகையையும் கொண்டுள்ளது.
