புதுடெல்லி: பல காரணங்களுக்காக 2025-26 கல்வியாண்டில் நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன.எனினும், தற்போது பயிலும் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புகளைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது. 2025-26ம் ஆண்டில் மொத்தம் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டன. படிப்படியாக மூடுதல் என்பது, எந்தக் கல்வியாண்டிற்கு மூட அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ, அந்தக் கல்வியாண்டின் முதல் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க முடியாது. இருப்பினும், தற்போதுள்ள மாணவர்கள் தொடர்ந்து படிப்பார்கள்.
58 பொறியியல் கல்லூரிகளில் உபி, மகாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மபியில் 8, தெலங்கானாவில் 4, மற்றும் பஞ்சாபில் 4 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், குஜராத், கர்நாடகா, புனே மற்றும் தமிழ்நாட்டில் தலா இரண்டு கல்லூரிகளும், அரியானா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு கல்லூரியும் மூடப்பட்டன.
