×

திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாக புனித சடங்குகள் அவசியம்: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: வழக்கமான சடங்குகள் நடந்தால் மட்டுமே அத்திருமணம் சட்டப்படி செல்லும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கவுஷால் சோனார் என்பவருக்கும் குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி கவுஷாய் சோனார், குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த பெண்ணுக்கும் தனக்கும் இந்து முறைப்படியான சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை. அவருடன் கணவராக வாழவில்லை.

எனவே திருமண பதிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். கடந்த ஆண்டு இதை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் இலேஷ் வோரா, ஆர்.டி.வச்சானி அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

இந்து திருமண சட்ட பிரிவு 7ன்படி மணமகனும் மணமகளும் புனிதமான அக்னிக்கு முன்பாக கூட்டாக ஏழு அடிகள் எடுத்து வைக்கும் சப்தபதி போன்ற சடங்குகள், ஒரு திருமணத்திற்கு ஆன்மீக, சமூக மற்றும் சட்டரீதியான அந்தஸ்தை வழங்குகின்றன . திருமண சடங்குகள் ஒரு தனிநபரின் ஆன்மாவை தூய்மைப்படுத்தி மாற்றியமைப்பதாக நம்பப்படுகிறது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். திருமணம் என்பது வெறும் பாடல் அல்லது நடனம் மற்றும் விருந்து கொண்டாடும் நிகழ்வு அல்ல. வெறும் பதிவு மட்டும் இந்து திருமணத்தில் ஏற்புடைய அல்ல. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags : Gujarat ,Ahmedabad ,Gujarat High Court ,Kaushal Sonar ,England ,
× RELATED குதிரை பேர புகார் அமித்ஷாவுடன் ஆளுநர்...