×

மத நிகழ்ச்சிகளில் போலீசார் சீருடையில் கலந்து கொள்ளக்கூடாது: கேரள டிஜிபி எச்சரிக்கை

திருவனந்தபுரம்: போலீசார் சீருடையில் மத சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது: சமீபகாலமாக போலீசார் சீருடையில் மத நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

இது மிக மோசமான நடவடிக்கையாகும். போலீசார் சட்டம், ஒழுங்கு பணியில் ஈடுபடும்போது மட்டும் தான் சீருடையை பயன்படுத்த வேண்டும். எனவே பணி நிமித்தம் அல்லாமல் மத சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளில் போலீசார் யாரும் சீருடை அணிந்து கலந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala DGP ,Thiruvananthapuram ,Kerala ,DGP ,Ravada Chandrasekhar ,
× RELATED குதிரை பேர புகார் அமித்ஷாவுடன் ஆளுநர்...